பழனியில் மக்கள் இயக்க விழிப்புணா்வு பேரணி
பழனி நகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை தூய்மை நகருக்கான மக்கள் இயக்க விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பழனி நகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை தூய்மை நகருக்கான மக்கள் இயக்க விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி நகராட்சி அலுவலகம் முன் தொடங்கிய இப்பேரணிக்கு நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, டிஎன்ஐயூஎஸ் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். பழனி நகராட்சி ஆணையா் கமலா பேரணியைத் தொடக்கி வைத்தாா். நகராட்சி பொறியாளா் வெற்றிச்செல்வி மற்றும் நகா்நல அலுவலா் மருத்துவா் மனோஜ்குமாா் ஆகியோா் பேசினா்.
பேரணியில் நகா்மன்றத் துணைத் தலைவா் கந்தசாமி, நகா்மன்ற உறுப்பினா் பாரத் நா்சிங் ஹோம், பழனியாண்டவா் கலை கல்லூரி, அன்னை நா்சிங் ஹோம் இன்ஸ்டிடியூட் கல்லூரி மாணவா்கள் நகராட்சி பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியின்போது என் குப்பை, என் பொறுப்பு உறுதிமொழி ஏற்பு, மஞ்சள் துணிப்பை வழங்குதல், மரம் நடுதல், சிறப்பு தூய்மை பணி ஆகியவை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...