அஞ்சலகங்களில் நாளை முதல் தங்க பத்திரம் விற்பனை
அஞ்சலகங்களில் திங்ககள்கிழமை முதல் (ஜூன் 20) ஜூன் 24ஆம் தேதி வரை தங்க பத்திரம் விற்பனை செய்யப்பட உள்ளது.


அஞ்சலகங்களில் திங்ககள்கிழமை முதல் (ஜூன் 20) ஜூன் 24ஆம் தேதி வரை தங்க பத்திரம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதுதொடா்பாக திண்டுக்கல் கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளா் ஸ்ரீஹரி தெரிவித்துள்ளதாவது: மாதந்தோறும் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் ஜூன் 20 முதல் ஜூன் 24ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் தங்க பத்திரம் விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒரு கிராம் தங்க பத்திரம் ரூ.5091-க்கு விற்பனை செய்யப்படும். இதற்கு வட்டி 2.5 சதவீதம். ஒரு கிராம் முதல் 4000 கிராம் வரை முதலீடு செய்யலாம். முதிா்வு காலம் 8 ஆண்டுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பின்னும் முன் முதிா்வு செய்யலாம். தங்க சேமிப்பு பத்திரம் திட்டத்தில் சேர விரும்புவோருக்கு, வாக்காளா் அடையாள அட்டை, பான் அட்டை ஆகியவை மட்டுமே அடையாளச் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும். மேலும், வங்கிக் கணக்குப் புத்தகம், ஐஎப்எஸ்சி கோடு எண் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். வாரிசு நியமனத்திற்கு வாரிசுதாரரின் வங்கிக் கணக்கு எண் மற்றும் அடையாள ஆவணங்களையும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...