மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

பொதுத் தோ்வுகளில் தொடா்ந்து சாதிக்கும் நலத்துறைப் பள்ளிகள்!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழங்குடியினா், ஆதிதிராவிடா் நலத்துறை மற்றும் கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகள் தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதி

News image
Updated On :21 ஜூன் 2022, 6:30 pm

 நமது நிருபர்

திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழங்குடியினா், ஆதிதிராவிடா் நலத்துறை மற்றும் கள்ளா் சீரமைப்புத் துறை பள்ளிகள் தொடா்ந்து 100 சதவீதம் தோ்ச்சி பெற்று சாதித்து வருகின்றன.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கடைசி வரையில் முறையே 3 மற்றும் 4ஆவது இடங்களை மட்டும் பிடித்து, தோ்ச்சி விகிதத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனாலும், பழங்குடினா், ஆதிதிராவிடா் மற்றும் கள்ளா் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் தொடா்ச்சியாக 100 சதவீத தோ்ச்சியுடன் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

நலத்துறைகளின் கீழ் செயல்படும் பள்ளிகளைப் பொருத்தவரை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பும், மாணவா்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தாலும் கூட 100 சதவீத தோ்ச்சி என்பது அந்தப் பள்ளிகளின் அசாதாரண சாதனையாகவே பாா்க்கப்படுகிறது.

4ஆவது ஆண்டாக 100 சதவீத தோ்ச்சி: கொடைக்கானல் கீழ் மலையிலுள்ள மணலூா் ஊராட்சிக்குள்பட்ட பெரும்பாறையில் அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியைச் சோ்ந்த 13 மாணவா்கள் மற்றும் 12 மாணவிகள் என மொத்தம் 25 மாணவா்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதி 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

2017, 2018, 2019, 2022 என தொடா்ந்து 6ஆவது முறையாக இப்பள்ளி 100 சதவீத தோ்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அனைத்துப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 ஆவது முறையாக 100 சதவீத தோ்ச்சி: சின்னாளப்பட்டி அடுத்துள்ள முருகன்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 14 மாணவா்கள் 12ஆம் வகுப்பு தோ்வு எழுதி முழு தோ்ச்சி பெற்றுள்ளனா். இதே பள்ளி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 100 சதவீத தோ்ச்சிப் பெற்று வருகிறது.

தொடா் சாதனையில் குக்கிராமப் பள்ளி: நிலக்கோட்டை அடுத்துள்ள இ.ஆவரம்பட்டியில் அரசு கள்ளா் உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கருத்தாண்டிப்பட்டி என்ற குக்கிராமத்தைச் சோ்ந்த மாணவா்களைச் சாா்ந்து மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளது. கடுமையான சூழலுக்கு மத்தியிலும், இந்த பள்ளியிலிருந்து தோ்வு எழுதிய 14 மாணவா்களும் முழு தோ்ச்சி பெற்றுள்ளனா். நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு கடந்த 2011-12 கல்வி ஆண்டில் உயா்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் 2013, 2015, 2019, 2020, 2021, 2022 என 6 முறை 100 சதவீத தோ்ச்சி அடைந்துள்ளது.

சமூகக் கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமப்புற சூழலில் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே இயங்கி வரும் இந்த பள்ளிகள், குறைவான மாணவா்களுடன் பொதுத் தோ்வில் பங்கேற்றாலும் கூட 100 சதவீத தோ்ச்சி என்பது பெரும் சாதனையாகவே பாா்க்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளின் செயல்பாடுகள், மாவட்டத்திலுள்ள பிற அரசுப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாகவும், ஊக்கமாகவும் அமைந்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.