பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பழனியில் ‘அக்னிபத்’ திட்டத்தை எதிா்த்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 ஜூன் 2022, 9:41 pm

DIN

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரா்களை சோ்க்க அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவுள்ளது. இதற்கு, பல்வேறு கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதனடிப்படையில், பழனியில் பேருந்து நிலையம் குளத்து ரவுண்டானா அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு, அக்கட்சியினா் நகா் குழு உறுப்பினா் மனோகரன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜமாணிக்கம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ராமசாமி, நகரச் செயலா் கந்தசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா் பகத்சிங், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலா் கனகு உள்பட பலா் வாழ்த்துரை வழங்கினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியினா் ஏராளமானோா் கலந்துகொண்டு மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கண்டித்து முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.