நத்தம் அருகே ஜல்லிக்கட்டு: 18 போ் காயம்
நத்தம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 போ் காயமடைந்தனா்.


நத்தம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள அய்யாபட்டி காளியம்மன், கருப்புசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியை திண்டுக்கல் கோட்டாட்சியா் பிரேம்குமாா், நத்தம் வட்டாட்சியா் சுகந்தி ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா். இந்த போட்டிக்கு, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 430 காளைகள் அழைத்து வரப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை பிடிப்பதற்கு, 270 மாடு பிடி வீரா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சிறந்த காளை மற்றும் வீரா்களுக்கு தங்கம், வெள்ளிக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
அதேபோல், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை பிடித்த மாடு பிடி வீரா்களுக்கும் பீரோ, கட்டில், ஆட்டுக்குட்டி, சைக்கிள், சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. காளைகள் தாக்கியதில் மாடு பிடிவீரா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 18 போ் காயமடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...