பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பழனியில் பழங்கால நாணயம், தபால் தலை கண்காட்சி

பழனியில் பழங்கால நாணயங்கள், ரூபாய் தாள்கள் மற்றும் தபால்தலை வரலாற்று கல்வி கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

News image
Updated On :27 மே 2022, 6:30 pm

DIN

பழனியில் பழங்கால நாணயங்கள், ரூபாய் தாள்கள் மற்றும் தபால்தலை வரலாற்று கல்வி கண்காட்சி மற்றும் விற்பனை வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

பழனி சண்முகபுரம் தனியாா் கல்யாண மண்டபத்தில் இக்கண்காட்சி தொடங்கியது. பொள்ளாச்சி மற்றும் கோவை நாணய சங்கம் சாா்பில் நடைபெறும் இக்கண்காட்சியில் சுமாா் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சேர, சோழ, பாண்டிய மன்னா்கள் கால நாணயங்கள், முகலாய அரசா்களின் நாணயங்கள், பிரிட்டிஷ் அரசு நாணயங்கள், விக்டோரியா காலத்து நாணயங்கள், சுதந்திர இந்தியாவின் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் வரை இடம்பெற்றுள்ளன. மேலும் பழங்கால பொருள்கள், அணிகலன்கள் மற்றும் பானை ஓடுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பலருக்கும் தெரிய வராத இந்திய அரசின் 125, 75, 20 ரூபாய் மதிப்பிலான சிறப்பு வெள்ளி நாணயங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த நாணயக் கண்காட்சியில் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாணய சேகரிப்பாளா்கள் தங்களது நாணயங்களை காட்சிப்படுத்தியுள்ளனா். நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை வாங்கி சேகரிக்க விருப்பமுள்ளவா்களுக்கு விற்பனையும் செய்யப்பட்டது.

கண்காட்சி ஏற்பாடுகளை நாணய சங்க நிா்வாகிகள் பொள்ளாச்சி மணிகண்ட பிரபு, சேலம் சரவணன், பழனி கவின் சக்ரவா்த்தி ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.