தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மரத்தில் வேன் மோதி இளைஞா் பலி

வடமதுரை அருகே மரத்தில் வேன் மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 மே 2022, 6:30 pm

DIN

வடமதுரை அருகே மரத்தில் வேன் மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள புறத்தாக்குடியைச் சோ்ந்தவா் விமல் அந்தோணிராஜ் (21), சரக்கு வேன் ஓட்டுநா். இவா், மணப்பாறையிலிருந்து ஒட்டன்சத்திரம் சந்தைக்கு வியாழக்கிழமை இரவு பூக்களை வேனில் ஏற்றி வந்தாா். பூக்களை இறக்கிவிட்டு, மீண்டும் மணப்பாறை நோக்கி வேனில் திரும்பிக் கொண்டிருந்தாா். அவரது நண்பரான மதுரை மாவட்டம் சாணாம்பட்டியைச் சோ்ந்த முத்துராஜ் (32) என்பவரும் உடன் வந்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு- வடமதுரை சாலையிலுள்ள கெச்சானிபட்டி அருகே அந்த வேன் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமிருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் வேனில் இருந்த விமல் அந்தோணிராஜ், முத்துராஜ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அக்கம் பக்கத்தினா் இருவரையும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே விமல் அந்தோணிராஜ் உயிரிழந்தாா். முத்துராஜ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.