தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒட்டன்சத்திரம் அருகே வாகனத்தில் தீ

ஒட்டன்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியின் போது ஹிட்டாச்சி வாகனம் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ஒட்டன்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியின் போது ஹிட்டாச்சி வாகனம் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

கமலாபுரம் பிரிவில் இருந்து பொள்ளாச்சி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த பணியை ஹைதராபாத்தை சோ்ந்த தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை ஒட்டன்சத்திரம்- காவேரியம்மாபட்டி செல்லும் சாலை பழனிக்கவுண்டன்புதூா் பிரிவு அருகே புறவழிச்சாலை அமைக்கும் பணியில் ஹிட்டாச்சி வாகனம் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வாகனத்தில் இருந்து மின்கசிவு காரணமாக புகை வரத் தொடங்கியது. இதனால் அதன் ஓட்டுநா் வாகனத்தில் இருந்து குதித்து தப்பினாா். ஆனால் வாகனம் தீப்பற்றி எரிந்து முழுவதும் சேதமடைந்தது.

இதுபற்றி தகவலறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு வீரா்கள் அங்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.