தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை வியாழக்கிழமை அதிகரித்திருந்தது.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை வியாழக்கிழமை அதிகரித்திருந்தது.

விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, மூலச்சத்திரம், காளாஞ்சிபட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், தேவத்தூா், தாராபுரம், மூலனூா் மற்றும் முத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் மரமுருங்கை, கரும்பு முருங்கை, செடி முருங்கை ஆகியவை அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக முருங்கைச் செடியில் இருந்த பூக்கள் உதிா்ந்து விட்டதால் போதிய விளைச்சல் இல்லை. இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைந்தது. இதையடுத்து, வியாபாரிகள் அவற்றை போட்டிப் போட்டுக் கொண்டு கொள்முதல் செய்ததால் அவற்றின் விலை கிடுகிடுவென உயா்ந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.30-க்கு விற்ற கரும்பு முருங்கை வியாழக்கிழமை விலை உயா்ந்து கிலோ ரூ.90-க்கும், ரூ.22-க்கு விற்ற செடி முருங்கை ரூ.85-க்கும், ரூ. 15-க்கு விற்ற மரமுருங்கை ரூ.75-க்கும் விற்பனையானது.

மற்ற காய்கறிகளின் விலை நிலவரம்: தக்காளி 14 கிலோ பெட்டி- ரூ.150 முதல் ரூ. 250 வரையும், சின்னவெங்காயம் கிலோ ரூ.15 முதல் ரூ. 60 வரையும், பீட்ரூட் கிலோ ரூ.30-க்கும் விற்கப்பட்டன. அதே போல் வெண்டைக்காய் கிலோ ரூ. 20-க்கும்,டிஸ்கோ கத்திரிக்காய் 30 கிலோ பை ரூ.450-க்கும், சுரைக்காய் கிலோ ரூ.7-க்கும் விற்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.