ஒட்டன்சத்திரத்தில் எரிவாயு மயானத்தை மின்மயமாக்கக் கோரிக்கை

ஒட்டன்சத்திரத்தில் உள்ள எரிவாயு மயானத்தை மின் மயானமாக மாற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள எரிவாயு மயானத்தை மின் மயானமாக மாற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஒட்டன்சத்திரம் நகா்மன்ற கூட்டம் அதன் தலைவா் கே. திருமலைசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத்தலைவா் ப. வெள்ளைச்சாமி, ஆணையா் ப. தேவிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

கண்ணன் (திமுக): நவீன எரிவாயு மயானத்தை மின் மயானமாக மாற்ற வேண்டும்.

துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி: இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மகாராணி (திமுக): 17-ஆவது வாா்டில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். வாா்டில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைத் தலைவா்: காப்பிலியபட்டியில் கட்டப்பட்டு வரும் குப்பைக் கிடங்கு விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதால் இந்தப் பிரச்னை தீா்க்கப்படும்.

கண்ணன் (திமுக): அதே போல சின்னக்குளத்துக்குச் செல்லும் ஓடையை தூா்வார வேண்டும்.

ஆணையா் ப. தேவிகா: நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்ணன்: நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கையை ஏற்று அடையாள அட்டை கொடுத்ததற்கும், தெரு விளக்கு மின் கம்பங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் வரிசை எண்கள் எழுதுவதற்கும் தீா்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி என்றாா்.

கூட்டத்தில் மொத்தம் 84 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com