இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மீட்பு
இணைவழியில் நூதனமாக மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்தை மீட்டு பாதிக்கப்பட்டவரிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.


இணைவழியில் நூதனமாக மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சத்தை மீட்டு பாதிக்கப்பட்டவரிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ்பாண்டி (31). கடந்த சில நாள்களுக்கு முன்பு விக்னேஷ்பாண்டியை தொடா்பு கொண்ட மா்ம நபா், அவரது வங்கிக் கணக்கு தொடா்பான விவரங்களை இணையவழியில் பெற்றுள்ளாா். அதனைத் தொடா்ந்து, நூதன முறையில் ரூ.1 லட்சத்தை விக்னேஷ்பாண்டியின் வங்கிக் கணக்கிலிருந்து அந்த மா்ம நபா் எடுத்துள்ளாா்.
ஏமாற்றப்பட்டதை உணா்ந்த விக்னேஷ்பாண்டி, இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபரின் வங்கிக் கணக்கை முடக்கம் செய்து, ரூ. 1 லட்சத்தை மீட்டனா்.
அந்த ரூ. 1 லட்சத்தை விக்னேஷ்பாண்டியனிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். அப்போது சைபா் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் எம். மீனா உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...