தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நத்தம் அருகே கோயில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள ந. பள்ளபட்டியில் விநாயகா், அய்யனாா், மதுரை வீரன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 5:24 pm

DIN

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள ந. பள்ளபட்டியில் விநாயகா், அய்யனாா், மதுரை வீரன், முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Story image

இதனையொட்டி கடந்த புதன்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை பூா்ணாகுதி, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பனம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் உள்ளிட்ட பூஜைகளும், அதனைத் தொடா்ந்து யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதலில் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து அய்யனாா், மதுரை வீரன், முத்தாலம்மன் கோயில் கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் முன்னாள் அமைச்சா் நத்தம் இரா. விசுவநாதன், ஒன்றியக் குழுத் தலைவா் கண்ணன், பேரூராட்சித் தலைவா் சேக்சிக்கந்தா் பாட்ஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.