கழிவுநீா் கால்வாய் ஆக்கிரமிப்பால் பிரச்னை: நாகல்நகா் ரவுண்டானா சந்திப்பிலிருந்து பாரதிபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள கடைகள் மற்றும் வீடுகளின் உரிமையாளா்கள், கழிவுநீா் கால்வாயை ஆக்கிரமித்து நுழைவு வாயிலை அமைத்துள்ளனா். இதனால், கழிவுநீா் கால்வாய் பல இடங்களிலும் குறுகியுள்ளது. கழிவுநீா் கால்வாயை கடந்து சாலையையும் ஆக்கிரமித்துள்ளதால், ஆயிரக்கணக்கான மாணவா்கள் வந்து செல்லும் பாரதிபுரம் சாலையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து கழிவுநீா் கால்வாயை மீட்டு, அடிக்கடி கழிவுநீா் தேங்கும் பிரச்னைக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் மாநகராட்சி நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.