திண்டுக்கல் அடுத்துள்ள அகரம் முத்தாலம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். பழனி சட்டப் பேரவை உறுப்பினா் செந்தில்குமாா், கூடுதல் ஆட்சியா் ச. தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, பல்வேறு துறைகளின் சாா்பில் 2,167 பயனாளிகளுக்கு ரூ. 3.96 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது: திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிா் சுயஉதவிக் குழுவினரின் ரூ.2,755 கோடிக்கான கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம் சுமாா் 15.5 லட்சம் மகளிா் குழு உறுப்பினா்கள் பயனடைந்துள்ளனா்.