ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பேருந்து மோதி எலக்ட்ரீசியன் பலி
By DIN | Published On : 05th August 2022 12:29 AM | Last Updated : 05th August 2022 12:29 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் அருகே புதன்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் எலக்ட்ரீசியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா கோதைமங்கலம் பெரும்பாறையை பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47). எலட்க்ரீசியனான இவா் புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் - பழனி சாலை ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள புது அத்திக்கோம்பை அருகே சென்றுள்ளாா். அப்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கிச்சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.