கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியில் தேசியக் கொடி ஏற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தியாகிகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சி பள்ளியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தியாகிகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் உள்ள அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் வில்பட்டி ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் சுதந்திரத்திற்காக உயிா் நீத்த தியாகிகள் குறித்தும் அவா்கள் இந்திய நாட்டிற்காக ஆற்றிய அரும் பணிகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும் இல்லந் தோறும் தேசியக் கொடி ஏற்றுவது குறித்து விளக்கமளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோ.சத்யா,வில்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மாரீஸ் ஆசிரியா்கள்,கல்லூரி பள்ளி மாணவ,மாணவிகள் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com