தான் படித்த அரசுப் பள்ளியில் பழைமையான கட்டடத்தை சொந்த செலவில் சீரமைத்த முன்னாள் மாணவா்
By DIN | Published On : 22nd July 2022 11:48 PM | Last Updated : 22nd July 2022 11:48 PM | அ+அ அ- |

கொடைரோடு அருகே, அம்மையநாயக்கனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவா் பள்ளிக் கட்டிடத்தை ரூ.5 லட்சம் செலவில் சீரமைத்ததோடு உபகரணங்களையும் வழங்கினாா்.
இப்பள்ளியில், 1972-1975 ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவரான சா்தாா் தற்போது, அமெரிக்காவில் தொழிலதிபராக உள்ளாா். இந்நிலையில், தான் படித்த அரசு பள்ளிலிருந்த பழைமையான கட்டடத்தை ரூ.5 லட்சம் செலவில் சீரமைத்தாா். மேலும் வகுப்பறைகளுக்குத் தேவையான 20 மேஜை மற்றும் நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றையும் தலைமையாசிரியா் (பொ) அமுதாவிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
அப்போது, பள்ளியின் முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியுமான கருப்பையா மற்றும் பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...