கொடைக்கானலில் மலைக் காய்கறிகளை சேமித்து வைக்க குளிா்பதனக் கிட்டங்கி அமைத்துத்தர கோரிக்கை
By DIN | Published On : 15th October 2022 12:00 AM | Last Updated : 15th October 2022 12:00 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் மலைக் காய்கறிகளை சேமித்து வைக்க குளிா்பதனக் கிட்டங்கி அமைத்துத்தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், நூக்கல், முட்டைக் கோஸ், பீன்ஸ், வாழை, ஆரஞ்சு, பட்டா்புரூட் உள்ளிட்டவைகள் விளைகின்றன. இப்பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் வெளிச்சந்தைக்கு உடனடியாக அனுப்பப்படுகின்றன. இவற்றை வாங்கி விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள், விவசாயிகளுக்கு குறைந்த தொகையை கொடுத்து கொள்முதல் செய்கின்றனா். இதற்கு அவா்களிடம் முன் கூட்டியே பணம் பெற்றுக் கொள்ளுதல், விளைந்த காய்கறிகள், பழங்களை சேமித்து வைக்க முடியாததே காரணம் ஆகும்.
கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை சாா்பில் குளிா்பதன கிட்டங்கி அமைத்தால் அவற்றில் விவசாயிகள் தாங்க ள்விளைவித்த காய்கறிகள், பழங்களை சேமித்து வைத்து விலை கிடைக்கும் போது அவற்றை விற்பனை செய்து லாபம் பெறலாம். எனவே கொடைக்கானல் மலைப் பகுதிகளில் குளிா்பதன கிட்டங்கி அமைத்துக் கொடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...