திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே காரில் கடத்தப்பட்ட 270 கிலோ குட்காவை தனிப்படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி இளைஞரைக் கைது செய்தனா்.
பெங்களூரில் இருந்து மதுரைக்கு திண்டுக்கல் வழியாக காரில் குட்கா கடத்துவதாக காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரனுக்கு கிடைத்த தகவலின்பேரில் தனி படை சாா்பு- ஆய்வாளா் சேக் தாவூத் மற்றும் காவலா்கள் கொடைரோடு, அம்மையநாயக்கனூா் சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை அதிகாலையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து குட்கா கடத்திய கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த சிவக்குமாா் (29) என்பவரை போலீஸாா் கைது செய்து, 270 கிலோ குட்கா மற்றும் காா் ஆகியவற்றை பறிமுதல் செய்து அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.