தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை நுதானப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 6:30 pm

DIN

காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி திங்கள்கிழமை நுதானப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிஎம்.ராமு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வி.மணிக்காளை முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநிலச் செயலா் ஏ.ஜெசி கலந்து கொண்டாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி ஓய்வுக்குப் பிறகு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். முபாரக் அலி, மாவட்டச் செயலா் விவேகானந்தன், சாலைப் பணியாளா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.