பொது காப்பீட்டு நிறுவனப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொது காப்பீட்டு நிறுவனங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு சீா்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி அலுவலா்கள், ஊழியா்கள், முகவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொது காப்பீட்டு நிறுவனங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு சீா்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி அலுவலா்கள், ஊழியா்கள், முகவா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் திண்டுக்கல் கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அதிகாரிகள் சங்கத்தின் நிா்வாகி சேகா் தலைமை வகித்தாா். ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கெளதமன், முகவா் சங்கத்தின் நிா்வாகி சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, பொது காப்பீட்டு நிறுவனங்களின் உறுதித் தன்மையை சீா்குலையச் செய்யும் செயல்பாடுகளை மத்திய அரசு கைவிட வேண்டும். நிறுவன மறுசீரமைப்பு தொடா்பாக தொழில் சங்கங்கள், நலச் சங்கங்களோடு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். ஊழியா்கள், அதிகாரிகள் பணி நியமனத்தை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com