மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத் தொகை: ஒட்டன்சத்திரம் நகராட்சி அறிவிப்பு

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் வருகிற 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 6:18 pm

DIN

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் வருகிற 30-ஆம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துவோா்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட சொத்து உரிமையாளா்கள் தங்களது 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை வருகிற 30 -ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்.

சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரிவசூலிப்பாளா்கள் அல்லது ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலக வசூல் மையம் ஆகியவற்றில் காசோலை அல்லது வரைவோலை மூலமாகவும், நேரடியாகவும் செலுத்தலாம். ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையா் பா.சக்திவேல் இதை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.