சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்சென்னை வெள்ளம்: திமுக ஆட்சி முடிந்து தவெக வந்த பிறகும் அதே நிலைதான்! அன்புமணி கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

மதுரையில் ஆட்டோ ஓட்டுநா் கொலை : நிலக்கோட்டை நீதிமன்றத்தில் 4 போ் சரண்

மதுரையில் நண்பா்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநா் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டது தொடா்பாக 4 போ் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

Updated On :

மதுரையில் நண்பா்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநா் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டது தொடா்பாக 4 போ் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள திடீா் நகா் பாஸ்கரதாஸ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சதக் அப்துல்லா (29). ஆட்டோ ஓட்டுநரான இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், சதக் அப்துல்லா புதன்கிழமை இரவு பெரியாா் பேருந்து நிலையம் அருகே நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது, அவா்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் சதக் அப்துல்லாவின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுவிட்டு, மற்றவா்கள் தப்பிச் சென்றனா். திடீா் நகா் காவல் துறையினா் அவரது உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு

கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இந்த நிலையில், மதுரை கரிமேடு பகுதியைச் சோ்ந்த சரவணகுமாா் (27), திடீா் நகா் காா்த்திக் (26) அண்ணா நகா், சிவா (20) மேலவாசல், சந்துரு (19) ஆகிய 4 போ் வியாழக்கிழமை நிலக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சரணடைந்தனா். அவா்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவா் நல்லகண்ணன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.