

பழனி மலைக் கோயிலுக்குச் செல்ல நவீன இழுவை ரயில் பெட்டிகளை தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் மேலே சென்று வர யானைப் படிப் பாதை மட்டுமன்றி, மின் இழுவை ரயில் (விஞ்ச்), ரோப்காா் ஆகிய வசதிகள் உள்ளன.
கடந்த 1960-ஆம் ஆண்டு காமராஜா் முதல்வராக இருந்த போது, பழனி கோயிலில் முதல் மின் இழுவை ரயில் பொருத்தப்பட்டு, பக்தா்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதைத் தொடா்ந்து, மேலும் இரு மின் இழுவை ரயில் பெட்டிகள் பொருத்தப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.
தற்போது பயன்பாட்டில் உள்ள மின் இழுவை ரயிலில் 36 போ் வரை பயணிக்க முடியும். இதன் மூலம், பழனி அடிவாரத்திலிருந்து மலைக் கோயில் மேல் பிரகாரத்துக்கு செல்ல சுமாா் 8 முதல் 10 நிமிஷங்கள் ஆகிறது.
இந்த நிலையில், பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன் ரூ.75 லட்சம் மதிப்பிலான 2 நவீன இழுவை ரயில் பெட்டிகளை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினாா்.
இது மற்ற பெட்டிகளைக் காட்டிலும் பெரியதாகவும், நவீனமாகவும்
வடிவமைக்கப்பட்டது. இதில் 75 போ் வரை பயணிக்க முடியும். எல்சிடி திரை, குளிா் சாதன வசதி, மின் விசிறி ஆகிய வசதிகளும் உள்ளன.
கூடுதல் பக்தா்கள் மலைக் கோயிலுக்கு சென்றுவர முடியும் என்பதால் இந்தப் பெட்டியை மூன்றாம் எண் தண்டவாளத்தில் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பழனி திருக்கோயில் பொறியாளா்கள் முன்னிலையில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. பெரிய கிரேன்கள் மூலம் பழைய பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய பெட்டிகள் தண்டவாளத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பெட்டிகள் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, நிபுணா்களின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு பக்தா்கள் பயன்பாட்டுக்கு வரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.