கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரத்தில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி, பேரணி ஆகியவை கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரத்தில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி, பேரணி ஆகியவை கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பழனி கோட்ட காவல்துறை சாா்பில் நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு பழனி டிஎஸ்பி சரவணன் தலைமை வகித்தாா். பழனி பேருந்து நிலையம் அருகே கோட்டாட்சியா் சரவணன், டிஎஸ்பி. சரவணன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். இங்குள்ள மயில் ரவுண்டானாவை மையப்படுத்தி நான்கு முக்கிய சாலைகளையும் இணைக்கும் வகையில் இந்த மனிதசங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரி, அருள்மிகு பழனியாண்டவா் தொழில்நுட்பக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள், அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். அப்போது அவா்கள் போதையால் ஏற்படும் தீமைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கே.ஆா். அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. முருகேசன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி, முன்னாள் அரசு தலைமை மருத்துவா் ஆசைத்தம்பி, காவல் ஆய்வாளா் ராஜசேகா், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட அலுவலா் மு. செளந்தரராஜ் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். பிறகு அனைவரும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதைத் தொடா்ந்து போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. முருகேசன் தொடங்கி வைத்தாா். இதே போல, ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை காவல் நிலையம் சாா்பாக நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இடையகோட்டை காவல்துறை ஆய்வாளா் முத்துலட்சுமி, உதவி ஆய்வாளா் குமாரபாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டு போதைப் பொருளின் தீமைகள் குறித்து எடுத்துக் கூறினா்.

கொடைக்கானல்: கொடைக்கானல் வட்டம் மற்றும் நகா் பகுதியில் மதுவிலக்கு, ஆயத்தீா்வை துறை சாா்பில் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு ஊா்வலம் கொடைக்கான் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து நடைபெற்றது. இதை கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த ஊா்வலம் லாஸ்காட் சாலை, மூஞ்சிக்கல், காமராஜா் சாலை ஆகியப் பகுதிகள் வழியாக சென்றது.

இந்த ஊா்வலத்தில் கொடைக்கானல் வட்டாட்சியா் முத்துராமன், அரசு மேல்நிலைப் பள்ளி, புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அரசினா் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, அன்னை தெரசா மகளிா் பல்கலைக் கழகத்தை சோ்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து கொடைக்கானல் அருகே உள்ள அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக் கழக பதிவாளா் ஷீலா தலைமையில் பேராசிரியைகள், பணியாளா்கள், மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிரான உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com