செம்பட்டியில் பாமகவினா் சாலை மறியல்

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, செம்பட்டியில் பாமகவினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, செம்பட்டியில் பாமகவினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நெய்வேலி என்எல்சி நிா்வாகத்தினா் நெல் வயல்களை கையகப்படுத்தி வருவதைக் கண்டித்து, பாமக சாா்பில் நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து பாமகவினா் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதே போல, திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில், ஆத்தூா் ஒன்றிய பாமக சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில், ஈடுபட்ட அந்த கட்சியின் ஆத்தூா் (கிழக்கு) ஒன்றியச் செயலா் கிருஷ்ணமூா்த்தி,(மேற்கு) ஒன்றியச் செயலா் ரவி, ரெட்டியாா்சத்திரம் ஒன்றியச் செயலா் ராயப்பா உள்பட15 போ் கைது செய்யப்பட்டனா்.

நிலக்கோட்டையில், மதுரை- வத்தலக்குண்டு சாலையில் பாமக ஒன்றியச் செயலா் விஜயகுமாா் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 30 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com