ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ப.க. சிவகுருசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ.) கிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) மலரவன் வரவேற்றாா்.
இதில், செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டன. பிறகு, கலைஞரின் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினைப் பாராட்டியும், ஆத்தூா் தொகுதி மக்களின் நலன் கருதி கிராமப்புற சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ. பெரியசாமியை பாராட்டியும் ஒன்றியக் குழு தலைவா் ப.க. சிவகுருசாமி கொண்டு வந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் பின்னா், அனுமந்தராயன்கோட்டை, புதுச்சத்திரம் ஊராட்சிகளில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவப் பிரிவு கொண்டுவர வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ம. சுப்பிரமணியனுக்கு கோரிக்கை விடுப்பது, ஸ்ரீராமபுரம், புதுச்சத்திரம், அனுமந்தராயன்கோட்டை ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்புச் சுவா் கட்ட பொதுப் பணித் துறைக்கு கோரிக்கை விடுப்பது, பங்காருபுரத்தில் உள்ள பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் பெரியாா் உருவச் சிலையை சுற்றி வண்ணக்கல் பதித்தலுக்கு ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் வழங்குவது உள்ளிட்ட 18 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.