பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த கூடைப் பந்து விளையாட்டுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
பள்ளி நிா்வாகமும் கோவை சாலிடான் டெக்னாலஜிஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் பயிற்சி முகாமை நடத்தின. இதில் பட்டிவீரன்பட்டி சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 190 மாணவா்களுக்கு கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. சிறப்பாகப் பயிற்சி பெற்ற மாணவா்கள், விளையாட்டு பள்ளிகளிலும், பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்கத் தோ்வு செய்யப்பட்டனா்.
பயிற்சி நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கூடை பந்தாட்டக் கழக தலைமைச் செயல் அதிகாரி பாலமுருகன், இணைச் செயலா் அருள் வெங்கடேஷ், திண்டுக்கல் மாவட்டத் தலைவா் செண்பக மூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினாா். பள்ளியின் செயலா் பிரசன்னா வரவேற்றுப் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.