பழனி: தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனா்.
கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா மகாராஜா ரஞ்சித்சிங் வளாகத்தில் பெங்களூரு ஜே.ஏ. சிலம்பம் அகாதெமி சாா்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இதில் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். பல்வேறு எடைப் பிரிவுகளில், பல்வேறு திறமைகள் அடிப்படையில், போட்டிகள் நடைபெற்றன.
இதில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்று, தொடும் முறை, தனித்திறமை, இரட்டைக் கம்பு என மூன்று வகையான போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.
இதன்படி, 35 -40 கிலோ எடைப் பிரிவில் ராகவி முதல் பரிசும், யாழினி இரண்டாம் பரிசும் பெற்றனா். 40 - 45 கிலோ எடைப் பிரிவில் மாணவி தீபிகா முதல் பரிசும், தேவதா்ஷினி இரண்டாம் பரிசும் பெற்றனா். 45 -50 கிலோ எடைப் பிரிவில் பிருந்தா முதல் பரிசும், மதுஸ்ரீ இரண்டாம் பரிசும், விஜயபாரதி மூன்றாம் பரிசும் பெற்றனா். 55 - 60 கிலோ எடைப் பிரிவில் மாணவி நித்யஸ்ரீ இரண்டாம் பரிசும், 50 -55 கிலோ எடைப் பிரிவில் ரம்யாவதி மூன்றாம் பரிசும் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரித் தாளாளரும், பழனிக் கோயில் இணை ஆணையருமான மாரிமுத்து, கல்லூரிச் செயலரும், துணை ஆணையருமான லட்சுமி, கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி, பயிற்சியாளா் கமல், ஒருங்கிணைப்பாளா் கவிதா உள்ளிட்டோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவுக்கு ரூ. 76 லட்சத்துக்கு மத்திய அரசு விளம்பரம்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அறிவாலயத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும்: அண்ணாமலை

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: 30 மாதங்களுக்குப் பிறகு அரசிதழில் வெளியீடு

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


