வத்தலகுண்டில் மின்வாரிய ஊழியா்களுக்கு, பாதுகாப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு திண்டுக்கல் மேற்பாா்வை பொறியாளா் அன்பழகன் தலைமை வகித்தாா். இதில் நிலக்கோட்டை, ஆத்தூா், கொடைக்கானல் ஆகிய மூன்று வட்டங்களைச் சோ்ந்த மின்வாரிய ஊழியா்களுக்கு பாதுகாப்பு குறித்தும், மின்வாரிய உபகரணங்களை பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது. இதில் செயற்பொறியாளா் கருப்பையா, உதவி செயற்பொறியாளா்கள் மாணிக்கம், மேத்யூ, ராஜேந்திரன், வத்தலக்குண்டு உதவிப் பொறியாளா் இளங்கோவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.