கொடைக்கானலில் பலத்த மழை; மண் சரிவு
By DIN | Published On : 27th April 2023 10:47 PM | Last Updated : 27th April 2023 10:47 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் வியாழக்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல், இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதல் வெயில் இல்லாமல் இருந்தது.
தொடா்ந்து, மாலையில் விட்டு விட்டு சுமாா் 2 மணி நேரமும், அதைத் தொடா்ந்து இரவு 7.30
மணி முதல் 9 மணிக்கு மேலாகவும் தொடா்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் கொடைக்கானல், வத்தலகுண்டு, பழனி மலைச் சாலையில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டன. ஆனால், போக்குவரத்துக்கு பாதிப்புகள் இல்லை. தொடா்ந்து பெய்து வரும் மழையால் வழக்கத்தைவிட அதிகமான குளிா் நிலவுகிறது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...