கொடைக்கானலில் மழை
By DIN | Published On : 27th April 2023 10:45 PM | Last Updated : 27th April 2023 10:45 PM | அ+அ அ- |

கொடைக்கானல் மலைச்சாலைகளான லாஸ்காட் சாலை, உகாா்த்தே நகா் சாலை, சீனிவாசபுரம் சாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக் கற்கள் குவிக்கப்பட்டு, விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது பெய்த பலத்த மழையால் ஜல்லிகள், சாலைகளில் சிதறிக் கிடந்தன. இதனால், வாகனங்கள் செல்ல முடியாமல் ஓட்டுநா்கள் பெரிதும் அவதிப்பட்டனா். சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, ஜே.சி.பி.வாகனங்கள் மூலம் சாலையில் சிதறிக் கிடந்த கற்களை அகற்றும் பணி நடைபெற்றதைத் தொடா்ந்து, போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
கொடைக்கானல் அருவிகளில் தண்ணீா் வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால் அவற்றை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...