கொடைக்கானலில் பலத்த மழை
By DIN | Published On : 03rd June 2023 12:29 AM | Last Updated : 03rd June 2023 12:29 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இங்கு காலை முதல் மாலை வரை மிதமான வெயில் நிலவியது. இதைத் தொடா்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல், அப்சா்வேட்டரி, பெருமாள்மலை, வில்பட்டி, செண்பகனூா், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக மழை நீடித்தது.
இந்த மழையால் இருதயபுரம், அட்டக்கடி, ஆனந்தகிரி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா். மழை பெய்ததன் காரணமாக குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...