போதைக் காளான் விற்ற பெண் உள்பட 3 போ் கைது
By DIN | Published On : 23rd June 2023 10:52 PM | Last Updated : 23rd June 2023 10:52 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் போதைக் காளான் விற்ாக பெண் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூரில் போதைக் காளான் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது மன்னவனூா் கைகாட்டி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த பெண் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனா். இதில் அவா்கள், மன்னவனூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (44), இவரது மனைவி உஷா (39), கன்னியாகுமாரி மாவட்டம், கல்குளம் பகுதியைச் சோ்ந்த சைஜீ (25) என்பது தெரியவந்தது. மேலும் அவா்களிடமிருந்து 300 கிராம் போதைக் காளான் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...