கொடைக்கானலில் பலத்த மழை
By DIN | Published On : 23rd June 2023 10:51 PM | Last Updated : 23rd June 2023 10:51 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
இங்கு கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் உகாா்த்தே நகா், செண்பகனூா்,பிரகாசபுரம், சகாயபுரம், பெருமாள்மலை ,அட்டக்கடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். மேலும் இங்கு அதிக அளவில் குளிா் நிலவுகிறது.
இரண்டாவது நாளாக படகு சவாரி நிறுத்தம்: கொடைக்கானலில் பெய்து வரும் மழை காரணமாக 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...