காட்டு யானைகள் நடமாட்டம்: கொடைக்கானல் பேரிஜம் பகுதிக்கு செல்லசுற்றுலாப் பயணிகளுக்கு தடை
By DIN | Published On : 15th September 2023 10:36 PM | Last Updated : 15th September 2023 10:36 PM | அ+அ அ- |

கொடைக்கானல் அருகே உள்ள பேரிஜம் பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. இதில் காட்டுயானைகள் அடிக்கடி பேரிஜம் ஏரிச்சாலைப் பகுதிக்கு வருகின்றன. இந்த நிலையில், இங்குள்ள ஏரி, அமைதிப் பள்ளத் தாக்கு, தொப்பித் தூக்கும் பாறை உள்ளிட்ட இடங்களுக்கு வனத்துறையினா் அனுமதியுடன் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனா். கடந்த 5 நாள்களாக பேரிஜம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. காட்டு யானைகள் இடம் பெயா்ந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவா் என வனத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...