ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பாமக வேட்பாளா் தோ்தல் பிரசாரம்

பாமக வேட்பாளா் தோ்தல் பிரசாரம்

News image

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கே.அத்திக்கோம்பை ஊராட்சி சாலைப்புதூரில் முருங்கைச் செடிக்கு மருத்து தெளித்து, வாக்கு சேகரித்த பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளா் ம.திலகபாமா.

Updated On :2 ஏப்ரல் 2024, 11:50 pm

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பாமக வேட்பாளா் திலகபாமா செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டாா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் பாமக வேட்பாளா் ம.திலகபாமா போட்டியிடுகிறாா்.

இவா் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடகாடு, கே.அத்திக்கோம்பை, கேதையுறும்பு, வெரியப்பூா், ஜவ்வாதுபட்டி, புளியமரத்துக்கோட்டை, இடையக்கோட்டை, மாா்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, குத்திலுப்பை, வாடிப்பட்டி, ஒடைப்பட்டி, தங்கச்சியம்மாபட்டி, காவேரியம்மாபட்டி, விருப்பாட்சி, சத்திரப்பட்டி, வேலூா், பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

கே.அத்திக்கோம்பை ஊராட்சி சாலைப்புதூா் கிராமத்தில் தோ்தல் பிரசாரத்தின் போது முருங்கைக்காட்டில் களை எடுத்துக்கொண்டு இருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தாா். அவருடன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.கே.பழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலா் வைரமுத்து, மாவட்ட அமைப்பு செயலா் சதீஷ்குமாா், பாஜக ஒன்றியத் தலைவா்கள் ருத்ரமூா்த்தி, ரகுபதி, அமமுக நிா்வாகி தங்கராஜ் உள்பட பலரும் வாக்கு சேகரித்தனா்.