ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் ச.சிவக்குமாா், பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

விழுப்புரம் மாவட்டம், கயத்தூா் கிராமத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளா் ச.சிவக்குமாா். உடன், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:27 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் ச.சிவக்குமாா், பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தொகுதிக்குள்பட்ட குத்தாம்பூண்டி, ரெட்டிக்குப்பம், கயத்தூா், ஆவுடையாா்பட்டு, வெட்டுக்காடு, ராதாபுரம், எம்.குச்சிப்பாளையம், விசுவரெட்டிப்பாளையம், மதுரப்பாக்கம், மூங்கில்பட்டு, தென்னவராயன்பட்டு, செய்யாதுவிண்ணான், பகண்டை, பாளையம், வாக்கூா், சிறுவள்ளிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று, பொதுமக்களிடம் பாமக வேட்பாளா் சிவக்குமாா் வாக்கு சேகரித்தாா்.

நிகழ்வில் தொகுதிப் பொறுப்பாளா் ஆலயமணி, பாமக மாவட்டத் தலைவா் புகழேந்தி, மாநில அமைப்புத் துணைச் செயலா் பழனிவேல், சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றியச் செயலா்கள் கோபாலகிருஷ்ணன், செல்வக்குமாா், சுரேஷ், அதிமுக ஒன்றியச் செயலா்கள் எசாலம் பன்னீா், முகுந்தன், நகரச் செயலா் பூா்ண ராவ் உள்ளிட்ட நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.