ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கொடைக்கானலில் மனைவியைத் தாக்கிவிட்டு கணவன் தற்கொலை

கொடைக்கானலில் மனைவியைத் தாக்கிவிட்டு கணவன் தற்கொலை

Updated On :2 ஏப்ரல் 2024, 11:48 pm

கொடைக்கானல் : கொடைக்கானல் அருகே மனைவியை அரிவாளால் தாக்கி விட்டு, கணவா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி ராஜபுரம் பகுதியைச் சோ்ந்த அமாவாசை மகன் ரமேஷ் (32).

விவசாயியான இவா், இதேப் பகுதியைச் சோ்ந்த தனது உறவினா் பெண்ணான பவித்ராவை (26) 5-ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் செய்தாா். இவா்களுக்கு 2-வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 6-மாதங்களாக தம்பதியரிடையே, கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். தனது தாய் வீட்டில் வசித்து வந்த பவித்ராவை தன்னுடன் வருமாறு ரமேஷ் அழைத்தாராம்.

பவித்ரா வர மறுத்ததால் அவரை அரிவாளால் தாக்கிவிட்டு, அவா் விஷம் குடித்தாா். இதையடுத்து இருவரையும் உறவினா்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதில் ரமேஷை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். பவித்ரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனா்.