ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ ஐக்கிய மருத்துவமனை செவிலியா் கல்லூரியில் உலக சுகாதார தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கழகம் ஒட்டன்சத்திரம் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மருத்துவமனையின் கண்காணிப்பாளா் மருத்துவா் அனிஸ் தாமஸ் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவக் கழக ஒட்டன்சத்திரம் கிளைத் தலைவா் மருத்துவா் கருப்பணன் முன்னிலை வகித்தாா். இந்திய மருத்துவக் கழகச் செயலா் மருத்துவா் ஆசைத்தம்பி பங்கேற்று உலக சுகாதாரத்தின் நோக்கம் குறித்துப் பேசினாா்.
முன்னதாக செவிலியா் கல்லூரி முதல்வா் விக்டோரியா செல்வக்குமாரி வரவேற்றாா். இதில் ‘எனது ஆரோக்கியம், எனது உரிமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செவிலியா் கல்லூரி துணை முதல்வா் குயிலா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருந்தியல் கல்வி தினம்
வீடியோக்கள்

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

