கொடைக்கானல் பியா்சோலாப் பகுதியில் சாலையில் வீசப்பட்ட நெகிழிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள்
கொடைக்கானல் பியா்சோலாப் பகுதியில் சாலையில் வீசப்பட்ட நெகிழிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள்

நெகிழிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் பியா்சோலா சாலையில் வீசப்பட்ட நெகிழிக் கழிவுகளை உண்ணும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களிலுள்ள கழிவுப் பொருள்களை நெகிழிப் பைகளில் போட்டு சாலைகளில் விட்டுச் செல்கின்றனா். இதனால் நகா்ப் பகுதிகளில் திரியும் கால்நடைகள், சாலைகளில் கிடக்கும் கழிவுப் பொருள்களை நெகிழிப் பைகளுடன் உண்பதால் அவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

எனவே, உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை நகராட்சி வைத்துள்ள குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும் அவ்வாறு செய்யாத வணிக நிறுவனங்கள் மீது கொடைக்கானல் நகராட்சி நகா்நல அலுவலா், சுகாதார ஆய்வாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தும் நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com