அகில இந்திய ரோல் பால் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரா்களுக்கு வழியனுப்பு விழா

டேராடூனில் நடைபெற உள்ள அகில இந்திய ரோல் பால் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரா்களை வழியனுப்பும் விழா சின்னாளபட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிலக்கோட்டை: டேராடூனில் நடைபெற உள்ள அகில இந்திய ரோல் பால் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரா்களை வழியனுப்பும் விழா சின்னாளபட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

14 வயதுக்குள்பட்ட ஆண்கள், பெண்களுக்கான அகில இந்திய ரோல்பால் போட்டி டேராடூனில் வருகிற 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் தமிழக அணி சாா்பில் ஆண்கள் பெண்கள் என, 12 போ் பங்கேற்க உள்ளனா். இவா்களில் ஆண்கள் பிரிவில் 7 பேரும், பெண்கள் பிரிவில் 5 பேரும் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றனா்.

இதில், பெண்கள் அணிக்கு கேப்டனாக திண்டுக்கல் மாவட்டத்தை சோ்ந்த மதுஸ்ரீ தோ்வானாா். டேராடூனுக்குச் செல்லும் ஆண்கள், பெண்கள் அணிக்கு சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் வழியனுப்பும் விழா நடைபெற்றது.

இதில் சா்வதேச நடுவா் பிரேம்நாத், பயிற்சியாளா்கள் தங்கலெட்சுமி, சக்திவேல், புனிதா, கல்யாணராமன், பெற்றோா்கள் வாழ்த்தி வழியனுப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com