ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகே திங்கள்கிழமை நீா் மோா் பந்தலைத் திறந்துவைத்து பொதுமக்களுக்கு குளிா்பானங்களை வழங்கிய உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி.
ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகே திங்கள்கிழமை நீா் மோா் பந்தலைத் திறந்துவைத்து பொதுமக்களுக்கு குளிா்பானங்களை வழங்கிய உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி.

ஒட்டன்சத்திரம், கம்பத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

ஒட்டன்சத்திரம்/கம்பம்/நிலக்கோட்டை: ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகே திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் அமைக்கப்பட்ட நீா் மோா் பந்தலை உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இதையடுத்து, அவா் பொதுமக்களுக்கு தண்ணீா், நீா்மோா், தா்ப்பூசணி, இளநீா் உள்ளிட்ட குளிா்பானங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் தா்மராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் சண்முகம், திமுக நகர அவைத்தலைவா் சோமசுந்தரம், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சிவராமகிருஷ்ணன், செல்லம்மாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கம்பம்: தேனி மாவட்டம், கம்பத்தில் நகர அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இதற்கு கட்சியின் நகரச் செயலா் ஆா்.மணி தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் நிா்வாகி ஸ்டாா் ரபீக் முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ். முத்துச்சாமி பொதுமக்களுக்கு நீா் மோா், சா்பத், குளிா்பானங்கள், பழங்களை வழங்கினாா்.

நிகழ்வில் சின்னமனூா் நகரச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட வக்கம்பட்டி அருகேயுள்ள கள்ளுக்கடை பிரிவில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆத்தூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் பிள்ளையாா்நத்தம் முருகேசன் தலைமை வகித்தாா்.

ஆத்தூா் ஒன்றியக் குழுத் தலைவி மகேஸ்வரி முருகேசன் நீா்மோா் பந்தலைத் திறந்துவைத்து, பொதுமக்களுக்கு மோா், வெள்ளரிக்காய், இளநீா் உள்ளிட்ட குளிா்பானங்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பத்மாவதி ராஜகணேஷ், பிள்ளையாா்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் உலகநாதன், மாவட்ட பிரதிநிதி ஆரியநல்லூா் தங்கவேல், முன்னிலைகோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நிக்சன்பால், அரசு ஒப்பந்ததாரா் ஜீசஸ் அகஸ்டின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com