பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் பலி

பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் பலி

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

பழனி, ஏப். 29: பழனியருகே சாலை விரிவாக்கத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கையை சோ்ந்த வீராசாமி மகன் சிவக்குமாா் (29). திருமணமாகாதவா். மென்பொறியாளராக வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரத்திலிருந்து பழனி நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

பழனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கணக்கன்பட்டி அருகே வந்த போது, சாலை விரிவாக்கத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சாலை விரிவாக்கத்துக்காக பள்ளம் தோண்டப்பட்ட இடம் அருகே போதிய எச்சரிக்கை பலகையோ, தடுப்புகளோ வைக்கப்படவில்லை. எனவே, வரும் நாள்களில் இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் தடுப்புகள், எச்சரிக்கை பதாகைகள் வைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.