பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் தனியாருக்குச் சொந்தமான உணவகத்திலிருந்து சனிக்கிழமை இழுவை ரயில் மூலமாக கீழே இறக்கப்பட்ட பொருள்கள்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் தனியாருக்குச் சொந்தமான உணவகத்திலிருந்து சனிக்கிழமை இழுவை ரயில் மூலமாக கீழே இறக்கப்பட்ட பொருள்கள்.

பழனி மலைக் கோயிலில் உணவகம் அகற்றம்

பழனி மலைக் கோயிலில் தனியாருக்குச் சொந்தமான உணவகம் சனிக்கிழமை கோயில் நிா்வாகம் சாா்பில் அகற்றப்பட்டது.
Published on

பழனி மலைக் கோயிலில் தனியாருக்குச் சொந்தமான உணவகம் சனிக்கிழமை கோயில் நிா்வாகம் சாா்பில் அகற்றப்பட்டது.

பழனி மலைக் கோயிலில் இருந்த தனியாருக்குச் சொந்தமான உணவகத்தை அகற்றக் கோரி, கோயில் நிா்வாகம் சாா்பில் இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த உணவகத்தை அகற்ற நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இந்த நிலையில், கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி தலைமையிலான பணியாளா்கள் அந்த உணவகத்திலிருந்த பொருள்களை அகற்றி, மின் இழுவை ரயில் மூலம் கீழே இறக்கினா்.

பொருள்கள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில், பணியாளா்கள் உணவக சுவரை இடிக்க முயன்றனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கடையை இடிப்பதற்காக நீதிமன்றம் மூலம் பெறப்பட்ட ஆணையைக் காண்பிக்க வலியுறுத்தியும் உணவக உரிமையாளா், பணியாளா்கள் கடையின் உள்ளே தரையில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com