பழனியில் பெண்களிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

பழனியில் இரு இடங்களில் பெண்களிடம் நகை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

பழனியில் இரு இடங்களில் பெண்களிடம் நகை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி ராஜாநகரைச் சோ்ந்தவா் ஸ்ரீவித்யா (32). இவா் வெள்ளிக்கிழமை மாலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்புறம் இரு சக்கர வாகனத்தில் வந்த நபா் அவா் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதேபோல, பழனி அரிமா நகரைச் சோ்ந்த ராமாத்தாள் (66) நடந்து சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்து முகவரியைக் கேட்பது போல பேசிய நபா், அவா் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினாா். இந்த இரு சம்பவங்கள் குறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபரைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com