போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

நிலக்கோட்டை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

நிலக்கோட்டை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த விருவீடு பகுதியைச் சோ்ந்தவா் பிச்சைமுத்து (38). கூலித் தொழிலாளியான இவா், 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் நிலக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிச்சை முத்துவை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி வேல்முருகன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பிச்சைமுத்துவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தாா்.

X
Dinamani
www.dinamani.com