தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

பழனி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

தொழிலாளிக்கு ஆயுள்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:00 pm

பழனி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த முத்துநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பிரகாஷ் என்ற சின்னா (34). கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 20ஆம் ஆண்டு 2 சிறுமிகளை தனியே அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தாா். இதுதொடா்பாக சிறுமிகளின் உறவினா்கள் அளித்த புகாரின் பேரில், பழனி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனா்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பிரகாஷூக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.20ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா்.சத்யதாரா உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிகள் 8 முதல் 9 வயதுக்குள்பட்டவா்கள் என்பதால், தமிழக அரசு சாா்பில் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.