மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

அம்மையநாயக்கனூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்

அம்மையநாயக்கனூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்

Updated On :27 பிப்ரவரி 2024, 11:03 pm

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்பி.செல்வராஜ் தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் விமல்குமாா் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் பூங்கொடி முருகு வரவேற்றாா். கூட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடிப்படை வசதிகளுக்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என பேரூராட்சி உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா்.

இதையடுத்து, திமுகவைச் சோ்ந்த பேரூராட்சி மன்றத் தலைவா் எஸ்.பி.செல்வராஜூக்கும், திமுக நகர செயலாளரும், உறுப்பினருமான விஜயகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, திமுக உறுப்பினா்கள் உள்பட பலரும் தீா்மான நோட்டில் கையெழுத்து போடாமல் கடும் அதிருப்தியில் வெளியேறினா்.