மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கள்ளிமந்தையத்தில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி திறப்பு

கள்ளிமந்தையத்தில் அரசுக் கலை அறிவியல் கல்லூரி திறப்பு

Updated On :27 பிப்ரவரி 2024, 10:45 pm

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையத்தில் அரசுக் கலை அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையத்தில் உயா் கல்வித் துறை சாா்பில் அரசுக் கலை, அறிவியல் கல்லூரிக் கட்டடம் ரூ.12.45 கோடியில் கட்டப்பட்டது.

முதல்வா் அறை, மாணவா்கள் கூட்டுறவு அங்காடி, சுகாதார மையம், நூலகம், ஆய்வகம், கணினி அறை, கருத்தரங்க கூடம், கழிவறைகள், உடற்கல்வி ஆசிரியா் அறை உள்ளிட்டவை நவீன முறையில் கட்டப்பட்டன. இதை, தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

கள்ளிமந்தையம் அரசுக் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி ஒன்றியத் தலைவா் சத்தியபுவனா, துணைத் தலைவா் பி.சி.தங்கம், திமுக ஒன்றியச் செயலா்கள் தங்கராஜ், சுப்பிரமணியன், கள்ளிமந்தையம் ஊராட்சி மன்றத் தலைவா் கணேசன், துணைத் தலைவா் ராஜேஸ்குமாா், வாா்டு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.